tamilnadu

img

பெட்ரோல் வரிகள் எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம் - அ.அன்வர் உசேன்

கோவிட்-19 எனப்படும் தொற்று நோய் உருவாக்கியுள்ள பல பாதிப்புகளில் ஒன்று பெட்ரோலிய மூலப்பொரு ளான பிரெண்ட் ஆயில் எனப்படும் குரூட் ஆயில் கச்சா எண்ணெய் விற்பனை வீழ்ச்சி ஆகும். எனினும் சர்வதேச வணிக போட்டிகள் காரணமாக ரஷ்யாவும் சவூதி அரேபி யாவும் உற்பத்தியை குறைப்பது இல்லை என முடிவு செய்துள்ளன. அமெரிக்க ஷேல் வாயு (பாறையிடுக்கு வாயு) நிறுவனங்களின் வணிகத்தை வீழ்த்துவது எனும் அணுகுமுறையும் இதில் அடங்கும். 

 

05.03.2020 

விலை

 14.03.2020

விலை

மாற்றம் டாலர்

மற்றும்

ரூபாயில்

மாற்றம்
பிரெண்ட் 
ஆயில்      
ஒரு 
பேரலுக்கு 
டாலரில்
     49.99  33.55  -16.44  -32.9%
பெட்ரோல்    
லிட்டருக்கு
ரூபாயில்
       71.29      69.87            -1.42     -2.0%
டீசல் 
லிட்டருக்கு 
ரூபாயில்
     63.94      62.58                 -1.36      -2.1%
பெட்ரோல் 
மீது 
கலால் வரி     
    19.98      22.98                    3.00      15.0%
டீசல் மீது 
கலால் வரி     
    15.83      18.83                   3.00       19.0%
 

 

(பிசினஸ்லைன்/16.03.2020)

இதன் விளைவாக பிரெண்ட் ஆயிலின் விலையும் அதன் தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கடுமையாக குறைந்துள்ளன. ஆனால் இந்தியாவில் மட்டும் இந்த விலைக் குறைவு மக்களுக்கு பலன் அளிக்க வில்லை. மாறாக எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்பது போல இந்த நெருக்கடியிலும் வரலாறு காணாத அளவிற்கு கலால்வரியை மோடி அரசாங்கம் உயர்த்தி யுள்ளது. இந்த உயர்வு எவ்வளவு அதீதமானது என்பதை கீழ்கண்ட விவரங்கள் தெளிவாக்கும்: பிரெண்ட் ஆயில் தனது விலையில் கிட்டத்தட்ட 33% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த விலைகுறைவை அப்ப டியே மக்களுக்கு மடைமாற்றியிருந்தால் 14ம்தேதி நிலவ ரத்திற்கு பெட்ரோல் விலை ரூ.23ம் டீசல் விலை ரூ.21ம் குறைந்து இருக்க வேண்டும். ஆனால் வெறும் ரூ. 2 மட்டுமே குறைந்தது. இதற்கு மோடி அரசாங்கம் உயர்த்திய கலால் வரிதான் காரணம் ஆகும்.  மேலும் சாலை வரியும் லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

அன்று சொன்னதும்  இன்று செய்வதும்

பெட்ரோல் விலையை அரசாங்கத்திற்கு பதிலாக எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமும் இதே முறையில் டீசல் விலையை நிர்ணயிக்கலாம் என பா.ஜ.க. அரசாங்கமும் முடிவு எடுத்த பொழுது  சர்வதேச சந்தையில் விலை குறைந்தால் அந்த பலன் நுகர்வோருக்கு மடை மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது நடைபெறவில்லை. மோடி அரசாங்கம் 2014ம் ஆண்டிலிருந்து பெட்ரோலுக்கு 142%ம் டீசலுக்கு 429%ம் வரிகளை உயர்த்தியுள்ளது. 

கடும் பொருளாதார வீழ்ச்சியும் வருவாய் வீழ்ச்சியும் இந்திய பொருளாதாரத்தை அரித்து வருகின்றன. இதனை எப்படி சமாளிப்பது எனும் எந்த வழியும் மோடி அரசாங்கம் அறிந்திருப்பதாக தெரியவில்லை. ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ எனும் கதையாக, பெட்ரோல்/டீசல் விலை குறைப்பு மூலம்  மக்களுக்கு சேர வேண்டிய சுமார் ரூ. 39,000 கோடியை தனது கணக்கில் அபகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல்/டீசல் விலை நிர்ண யிப்பில் மட்டும் இப்படி சுமார் ரூ. 2,42,000 கோடியை மோடி அரசாங்கம்,  நாட்டு மக்களின் கைகளில் இருந்து பறித்துச் சூறையாடியுள்ளது.

கோவிட் 19 தொற்று நோய் காரணமாக நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் பல உழைப்பாளிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் உருவாகும். இந்த நேரத்தில் மத்திய அரசாங்கத்தின் வரி உயர்வு என்பது கொடூரமானது. 2014ம் ஆண்டிலிருந்து வங்கிகள் பெரு முதலாளிகளுக்கு ரூ. 7,78,000 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளன.  2018-19ம் ஆண்டு மட்டும் ரூ.1,83,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மோடி அரசாங்கம் பெருமுதலாளிகளுக்கு அளித்த வரிச்சலுகை கள் பல்லாயிரம் கோடி! கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரிவழங்கும் அரசாங்கம் மக்களுக்கு நியாயமாக சேர வேண்டிய பெட்ரோல்/டீசல் விலைகுறைப்பைக் கூட மறுக்கும் நயவஞ்சக செயலை செய்கிறது. இது அப்பட்டமான கூட்டுக் களவாணி முதலாளித்துவம் அன்றி வேறு அல்ல!

பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் இந்தியா பெற்ற மிக மோசமான அரசாங்கம் மோடி அரசாங்கம்தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.